Friday 9 September 2011

ஆனந்‌த வி‌கடன்‌ பே‌ட்‌டி‌

நம்முடைய வேர்கள் இன்னமும் கிராமத்துலதான் இருக்கு! 
- பாலு மலர்வண்ணன்
"ஒண்ணு கதையை நாம உருவாக்கணும். இல்லாட்டி, நாம வாழ்ற கதையைப் படமாக்கணும். நான் ரெண்டாவது பாதையைத் தேர்ந்தெடுத்தேன். காலம் எவ்வளவு மாறினாலும் காதலின் ஜீவன் மாறவே மாறாது. அதைப்பத்திதான் 'ஒத்த வீடு' படத்தில் சொல்லி இருக்கேன்!" -நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் பாலு மலர்வண்ணன். சினிமா பி.ஆர்.ஓ-வாக இருந்தவருக்கு இப்போது இயக்குநர் புரொமோஷன்!

இப்பவும் இந்த மாதிரியான படங்களுக்கு வரவேற்பு இருக்குமா?

நாம வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவங்க இல்லையே. நம்முடைய வேர்கள் இன்னமும் இங்கேதான் இருக்கு. கான்க்ரீட் பூமிக்குள்ளே நாம ஊறினாலும், ஊருக்குப் போனதுமே உற்சாகம் வந்திருதே! இன்னமும் ரத்தமும் சதையுமாத்தானே கிராமத்தில் வாழ்ந்துட்டு இருக்காங்க. நல்ல உணர்வுகளைத் தட்டியெழுப்பும் சினிமாவுக்கு எப்பவும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு!

புதுமுகங்கள் நல்லா நடிச்சிருக்காங்களா?

கிராமத்துக் கதைகளில் பேய் பற்றி இன்னும் சொல்லாத விஷயம் நிறைய இருக்கு. பேய்க்கும் பக்திக்கும் இடையில் இருக்கிற உறவுப்பத்தி கிராமங்களில் எப்பவும் பேசிட்டே இருப்பாங்க. இப்படி ஒரு கதைக்குப் புதுமுகங்கள்தான் எந்தச் சாயலும் இல்லாம பொருந்துவாங்கன்னு திலீப்குமார், ஜானவி ரெண்டு பேரையும் தேடிப் பிடிச்சு நடிக்க வெச்சிருக்கேன். அம்மாவாக வடிவுக்கரசி வாழ்ந்து காட்டியிருக்காங்க!

கிராமத்து வாழ்க்கைன்னா 'பருத்தி வீரன்' பாணி முரட்டுக் கிராமமா?

கிராமத்துல இருக்குறதைத்தானே 'பருத்திவீரன்'ல அழகாப் படம் பிடிச்சிருந்தாங்க. திருவிழாக்களை, குலதெய்வங்களை நாம மறந்துட்டோம். அதைப் படத்தில் ஞாபகப்படுத்தி இருக்கேன். புகழ்பெற்ற வீரனார் ஆட்டத்தை இசையமைப்பாளர் தஷி அழகா கொண்டு வந்திருக்கார். கிராமங்களில் சாமியாடிக்குப் பெரிய ரோல் ஒண்ணு உண்டு. அப்படி ஒரு கேரக்டரில் எம்.எஸ்.பாஸ்கர் அசத்தலா நடிச்சிருக்கார். 'ஒத்த வீடு' அசலான கிராமப்பதிவு. இதில் சினிமா பாசாங்கு எதுவும் இல்லை!

நன்‌றி‌: ஆனந்‌த வி‌கடன்‌: 31.08.2011

No comments:

Post a Comment